close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்த இவர், சீசன் 5ல் கலந்து கொள்வாரா?

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்த பிரபலம் ஒருவர் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொள்ள இருந்த போட்டியாளர்களில் ஓருவர் அசீம் என்பது தெரிந்ததே. கடைக்குட்டி சிங்கம் சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த இவர் ஷிவானி கலந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவர் தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் ஆனால் திடீரென அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி ஒருசிலர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று சதி செய்ததாகவும் அசீம் பேட்டியில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இவர் பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் அசீம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்த இவர் சீசன் 5ல் கலந்து கொள்ள வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.