close
Choose your channels

'தளபதி 63' தீபாவளி ரிலீஸில் திடீர் மாற்றம்?

Tuesday, February 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் இயக்குனர் அட்லி இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நாட்களுக்கு முன்னரே முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் அதற்கு முன்னரே ஆகஸ்ட் மாதமே வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முன்கூட்டியே தீபாவளி வந்துவிடும் என கருதப்படுகிறது.

விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.