close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாள்களில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது .

மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி என்பதை சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.