close
Choose your channels

தளபதி விஜய்யின் அடுத்தகட்ட அமெரிக்க திட்டம்

Monday, February 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சிலநாட்களாக சென்னையிலும் அதனை சுற்றிய பகுதிகளிலும் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த முதல்கட்ட படப்பிடிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக விஜய், கீர்த்தி சுரேஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் அமெரிக்கா செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள அமெரிக்க படப்பிடிப்பு 20 நாட்கள் தொடரும் என்றும் இந்த படப்பிடிப்பில் பாடல்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த படத்தை பிரமாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.