close
Choose your channels

கமல்-ரஜினி நடிக்க இருந்த படத்தில் விஜய்? 'தளபதி 67' படம் குறித்த ஆச்சரிய தகவல்

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாகவும் அந்த படம்தான் ‘தளபதி 67’ என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் தயாராக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகி இருந்த நிலையில் திடீரென இந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை என முடிவு எடுத்ததாக புறப்பட்டது.

அதனை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’விக்ரம்’ திரைப்படம் உருவானது என்பதும் இந்த படம் வரும் ஜூலை 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகயிருந்த படத்தின் கதையைத்தான் விஜய்யிடம் கூறி லோகேஷ் கனகராஜ் சம்மதம் பெற்றாதாக கூறப்படுகிறது.

எனவே ரஜினி நடிக்க இருந்த மாஸ் படத்தில் தற்போது விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.