close
Choose your channels

'எஸ் 3' படத்தை முந்துகிறதா 'தானா சேர்ந்த கூட்டம்'?

Sunday, January 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிங்கம், சிங்கம் 2, ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வெற்றி பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாகவும், அனேகமாக 'எஸ் 3' படத்தின் ரிலீசுக்கு முன்னரே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்ஜே பாலஜி, சுரேஷ் மேனன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.