close
Choose your channels

நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகரின் தமிழ்ப்படம்

Monday, April 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகரின் தமிழ்ப்படம்

ஒரு படத்தை தயாரிப்பது எந்த அளவுக்கு சிரமமோ அதைவிட பல மடங்கு சிரமமான காரியமாக உள்ளது அந்த படத்தை ரிலீஸ் செய்வது. சரியான காலம், சரியான திரையரங்குகள், ஆன்லைன் பைரசி, திருட்டு டிவிடி, பெய்டு விமர்சகர்களின் நெகட்டிவ் விமர்சனங்கள், சரியான வசூல் கணக்கு இல்லாதது என ஒரு தயாரிப்பாளர் பலவிதங்களில் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார். இதில் பெரிய அளவில் பாதிக்கப்படுவது சிறு பட்ஜெட் படங்களே

இந்த பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்யும் திட்டம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த சில மாதங்களாக ஆலோசித்து வந்தனர்

அந்த வகையில் தற்போது இந்த முறை செயலுக்கும் வந்துவிட்டது. பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடித்த 'சில சமயங்களில்' என்ற திரைப்படம் நாளை முதல் நேரடியாக ஆன்லைனில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ், இயக்குநர் விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் திரையரங்க்குகளில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இன்னும் பல சின்ன பட்ஜெட் படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.