close
Choose your channels

டிக்கெட் டு ஃபினாலே.. இறுதி மேடையை முத்தமிட போவது யார்? கடும் போட்டி..!

Tuesday, December 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுபவர்கள் யார் என்ற கேள்விகள் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே அதிக நபர்கள் தற்போது வீட்டில் இருப்பதால் இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்சன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் திடீரென இன்று டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் வைத்துள்ளார். இந்த கடுமையான டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டாஸ்க்கில் விஷ்ணு, மணி, ரவீனா, பூர்ணிமா, மாயா, விசித்திரா, தினேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய முயலை சுற்றி ஒரு கோட்டையை கட்ட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் வெற்றி பெற கடுமையாக போராடி வருகின்றனர். இதில் பூர்ணிமா, விசித்ரா, தினேஷ் ஆகியோர் வெளியேறிவிட விஷ்ணு, நிக்சன், மணி, பூர்ணிமா, மாயா ஆகியோரில் ஒருவருக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைக்கும் என தெரிகிறது.

இறுதியாக டிக்கெட் பின்னாலே டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.