close
Choose your channels

அவனோட கதையெல்லாம் ராத்திரியில சொல்லக்கூடாது: டொவினோ தாமஸின் 'ARM' டீசர்..!

Saturday, May 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்த ’2018’ என்ற திரைப்படம் மே 5ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டொவினோ தாமஸ் நடித்த அடுத்த திரைப்படமான ‘ARM’ என்ற படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மலையாள திரையுலகை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையம்சம் கொண்டு உருவாக்கப்படும் நிலையில் இந்த படமும் அதே போன்ற ஒரு கதை அம்சத்துடன் தான் உருவாக்கி உள்ளது என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது.

‘ARM’ நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜித்தன் லால் என்பவர் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. மொத்தத்தில் இந்த படமும் ’2018’ திரைப்படம் போல் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.