close
Choose your channels

'வலிமை' வில்லன் கார்த்திகேயா திருமணம்: நேரில் வாழ்த்து சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

Sunday, November 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்தின் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா திருமணத்தில் பிரபல நடிகர் நேரில் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகிய திரைப்படமான ’வலிமை’ வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்டிகேயா திருமணம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

தனது நீண்ட நாள் தோழியான லோகிதா ரெடி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட கார்த்திகேயாவுக்கு இரு தரப்பு குடும்பத்தினர்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் கார்த்திகேயா திருமணத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அல்லு அரவிந்து உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.