close
Choose your channels

ரஜினியின் 'தலைவர் 169' : நெல்சனுக்கு உதவி செய்யும் சூப்பர்ஹிட் இயக்குனர்!

Monday, June 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ’தலைவர் 169’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதைக்கு நெல்சனுடன் இணைந்து பணியாற்ற சூப்பர் ஹிட் இயக்குநர் ஒருவரை ரஜினி நியமித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’தலைவர் 169’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் நெல்சன் ஈடுபட்டு வரும் நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற கேஎஸ் ரவிக்குமாரை ரஜினிகாந்த் நியமனம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார், இந்த படத்தில் ரஜினிக்காக சில மாஸ் காட்சிகளை இணைக்க நெல்சன் உடன் பணிபுரிவார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், மேலும் முக்கிய கேரக்டர்களில் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்பட ஒரு சிலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.