close
Choose your channels

 வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Saturday, April 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட பலர் நடிப்பில் உருவான ’விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர் என்பதும் இந்த படம் ’ஏ’ சர்டிபிகேட் பெற்ற போதிலும் திருப்தியான வசூலைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று இந்த படம் முதல் நாளில் ரூபாய் 3.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ரூபாய் 10 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வருடத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படமும் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து பட குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos