close
Choose your channels

விஜய்சேதுபதி-மஞ்சுவாரியருக்காக புதிய டெக்னாலஜி.. வெற்றிமாறனின் வேற லெவல் திட்டம்..!

Thursday, November 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருவரும் கணவன் மனைவியாக நடிக்க உள்ள நிலையில் பிளாஷ்பேக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறுவதாகவும் அது 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற காட்சிகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிளாஷ்பேக் காட்சிகளில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரையும் இளமையாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக டீஏஜிங் என்ற புதிய டெக்னாலஜியை வெற்றிமாறன் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர் பிளாஷ்பேக் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’விடுதலை 2’ படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ஜெயமோகன் வசனத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராமர் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos