close
Choose your channels

7 வருடங்களுக்கு முன்பே நயனை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விக்கி: வைரல் வீடியோ

Friday, October 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாராவை ஏழு வருடங்களுக்கு முன்பே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விக்னேஷ் சிவனின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் விக்னேஷ் சிவனுக்கு தொழில் அளவில் கிடைத்த வெற்றி மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் நயன்தாராவின் காதல் கிடைத்ததால் மேலும் ஒரு கூடுதல் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பின் போது எழுந்த காதல்தான் என்று விக்னேஷ் சிவன் - நயன்தாராவை தற்போது தம்பதிகளாக ஆக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நானும் ரெளடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் விஜய் சேதுபதிக்கு ஒரு காட்சியில் நடிப்பதற்கு சொல்லிக் கொடுக்கும்போது அருகில் இருக்கும் நயன்தாரா விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சி உள்ளது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன், ‘7 ஆண்டுகளுக்கு முந்தைய சந்தோஷமான அனுபவம். இந்த படம் எனக்கு எல்லாவற்றையும் தந்தது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.