close
Choose your channels

பிறந்தேன், வாழ்ந்தேன், சாதிக்கிறதுக்குள்ள என்னை கொன்னுட்டாங்க: 'கொலை' டிரைலர்

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த ‘கொலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள ‘கொலை’ டிரைலரில் மர்மமாக நடைபெறும் ஒரு கொலையை செய்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் விஜய் ஆண்டனியின் வித்தியாசமாக துப்பறியும் காட்சிகள் உள்ளன.

விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங் துப்பறியும் இந்த கொலைக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதையாகும் .

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இந்த படத்தை பாலாஜி குமார் என்பவர் இயக்கியுள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.