close
Choose your channels

விஜய்யை முந்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர்

Wednesday, February 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'நையப்புடை'. அறிமுக இயக்குனர் விஜயகிரண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

'நையப்புடை' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தேதியை விரைவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பே அவருடைய தந்தை எஸ்.ஏ.சி நடித்துள்ள படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பா.விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், ராஜேந்திரன் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.