close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': ஷாப்பிங் மால் காட்சி இதுதானா?

Wednesday, August 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக பிரமாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு அதில் சில நாட்கள் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி ஷாப்பிங் மால் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்ன? என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது

ஷாப்பிங் மால் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்குள்ள பொதுமக்களை பணய கைதியாக வைத்து இருந்ததாகவும் தளபதி விஜய் அதிரடியாக தனது படையினருடன் ஷாப்பிங் மால் சென்று பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த த்ரில் காட்சி படத்தில் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.