close
Choose your channels

'மாவீரன்' படம் பார்க்க வந்த விஜய் மனைவி சங்கீதா.. இன்னும் யாரெல்லாம் வந்துருக்காங்க பாருங்க..!

Friday, July 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் இடைவேளை வரையிலான விமர்சனம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதுவரை இந்த படம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் படம் மிகவும் அருமை என்றும் விறுவிறுப்பாக செல்கிறது என்றும் காமெடி மிகச் சிறந்த அளவில் வொர்க்-அவுட் ஆகியுள்ளது என்றும் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ’மாவீரன்’ நிச்சயம் ஒரு வெற்றிப் படம் என்பது தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்று ’மாவீரன்’ முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பல திரையுலக பிரபலங்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். குறிப்பாக தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா இன்று சென்னையில் உள்ள திரையரங்கில் ’மாவீரன்’ படம் பார்க்க வருகை தந்தார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்திருந்தார் என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சரிதாவும் ’மாவீரன்’ படம் பார்க்க வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நம் ’மாவீரன்’ படத்தின் நாயகி அதிதி ஷங்கர் இன்று முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்திருந்தார். அதேபோல் இந்த படத்தை பார்க்க பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.