close
Choose your channels

கமல்ஹாசனின் புதிய படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு

Saturday, January 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் ஒருபக்கம் அரசியல் களத்தில் குதிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவருடைய 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்த படம் இவ்வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

கமல் தனது டுவிட்டரில் கூறியதாவது: திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்' என்று கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.