close
Choose your channels

விக்ரமின் 'இருமுகன்' படத்தில் எத்தனை பாடல்கள். புதிய தகவல்

Tuesday, July 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் 'இருமுகன்' படத்திற்காக ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாகவும், விரைவில் அவர் இந்த படத்தின் மாஸ்டர் காப்பியை அளிக்கவுள்ளதாகவும், மாஸ்டர் காப்பியை பெற்றுக்கொண்டவுடன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
விக்ரம், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேரும் இந்த படத்தில் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.