close
Choose your channels

நிறைவு கட்டத்தை நெருங்கும் 'தங்கலான்' .. அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக கோலார் தங்க வயலில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்களை விக்ரம் உள்ளிட்ட பட குழுவினர் அவ்வப்போது தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இம்மாத இறுதியில் கோலார் தங்க வயலில் நடைபெறும் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் இதனை அடுத்து 15 நாட்கள் மட்டுமே மீதம் உள்ள படப்பிடிப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன அதில் 10 நாட்கள் சென்னையிலும், 5 நாட்கள் மதுரையிலும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் பார்த்தபோது படம் உலக தரத்தில் வந்துள்ளதால் பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏப்ரல் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பிருப்பதாகவும் அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதையும் கொண்ட இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.