close
Choose your channels

மதுக்கடையில் மது வாங்க வந்தவர்களை அடித்து விரட்டிய விஷால்.. பரபரப்பு வீடியோ..!

Tuesday, January 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மது கடைகளில் மது வாங்க வந்த மதுப்பிரியர்களை நடிகர் விஷால் அடித்து விரட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகராக மட்டுமே விஷால் சமூக சிந்தனை உடையவர் என்பதும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அவர் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய அம்மாவின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையின் மூலம் அவர் பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகிறார் என்பதும் பல ஏழை குழந்தைகள் அவருடைய உதவியால்தான் படித்து பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் மதுக்கடை இன்று விடுமுறை என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தும் மது பிரியர்கள் மதுக்கடையின் முன் நின்று மது வேண்டும் என்று பிரச்சனை செய்கின்றனர்.

அப்போது அங்கு வரும் விஷால் அவர்களிடம் , ‘மதுக்கடை தான் விடுமுறை என்ற போர்டு எழுதி வைக்கப்பட்டுள்ளது அல்லவா? எதற்காக இங்கு நின்று பிரச்சனை செய்கிறீர்கள் என்று மதுப்பிரியர்களை அடித்து விரட்டும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இந்த காட்சி விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ’ரத்னம்’ என்ற படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.