close
Choose your channels

விஷாலின் 'சண்டக்கோழி 2' சென்சார் தகவல்கள்

Monday, October 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ள 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'சண்டக்கோழி 2' படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் வரும் 18ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.