close
Choose your channels

சூப்பர் ஸ்டார் டைட்டிலில் விஷ்ணுவிஷால்

Thursday, November 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களின் டைட்டில்களில் கோலிவுட்டில் பல படங்கள் உருவாகி வருகிறது. குரு சிஷ்யன், படிக்காதவன், மாப்பிள்ளை, பாயும் புலி, தில்லு முல்லு, பில்லா, தங்க மகன் போன்ற சூப்பர் ஸ்டார் நடித்த படங்களின் டைட்டில்களில் பல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது ரஜினியின் மற்றொரு வெற்றி படமான 'வீரா' படத்தின் டைட்டிலில் உருவாகவுள்ள படம் ஒன்றில் பிரபல இளம் நடிகர் விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ஏற்கனவே பாபிசிம்ஹா நடிக்கவிருந்த நிலையில், தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதால் விஷ்ணுவிஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் ராஜாராமன் இயக்கவுள்ள இந்த படம் ஆக்சன் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்று கூறப்படுகிறது. லியான் ஜேம்ஸ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.; ஏற்கனவே விஷ்ணு-கருணாகரன் கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'இன்று நேற்று நாளை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.