close
Choose your channels

அஜித்தின் 'விஸ்வாசம்' இன்றைய புதிய அப்டேட்

Tuesday, December 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக நேற்று இரவு 'அடிச்சு தூக்கு' என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பது மட்டுமின்றி இனி ஒவ்வொரு திருவிழாவிலும் தவறாமல் இடம்பெறும் பாடலாகவும் இருக்கும் என்பது உறுதி.

இந்த நிலையில் நேற்று சிங்கிள் பாடல் என்ற அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், இன்றைய அப்டேட்டாக இந்த படத்தின் கர்நாடக உரிமையை ஹரிஜோன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அஜித்தின் முந்தைய படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பொங்கல் வரை இனி ஒவ்வொரு நாளும் 'விஸ்வாசம்' படத்தின் புதிய அப்டேட்டுக்கள் இருக்கும் என்று கருதப்படுவதால் சமூக வலைத்தளங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பது உறுதி

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.