close
Choose your channels

மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக்காட்சியில் அஜித்தின் விஸ்வாசம்!

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான விழா கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 முதல் 11 வரை இந்த விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் உள்ள பல நகரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு விஷயங்கள் இந்த விழாவில் அறிவிக்கப்படுவதுண்டு.

இந்த நிலையில் சென்னையில் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை சத்யம் திரையரங்கில் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் சிறப்புகாட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சியில் வழக்கமாக திரையில் தோன்றும் வசனங்கள் ஸ்பீக்கர்களில் ஒலிக்கும். ஆனால் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் காட்சிகளை புரிந்து கொள்வதற்காக ஏற்கனவே ரிகார்ட் செய்யப்பட்ட வர்ணனைகள் அவர்களது ஹெட்போனில் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் வசனத்தை கேட்கும்போதே, ஹெட்செட்டில் ஒலிக்கும் வர்ணனைகளை வைத்து அந்த காட்சிகளை புரிந்து கொள்வர். இந்த காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் நாளை மாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.