close
Choose your channels

'திருட்டுப்பயலே 2' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்

Tuesday, November 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'திருட்டுப்பயலே 2' படத்தில் பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு முன்னணி காமெடி நடிகர்கள் இணைந்துள்ளனர்.
ஒருவர் சீனியர் காமெடி நடிகரான விவேக் மற்றும் இன்னொருவர் வளர்ந்து வரும் காமெடி நடிகரான ரோபோ சங்கர். இவர்கள் இருவரும் 'திருட்டுப்பயலே 2' படத்தில் இணைந்துள்ளதை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.