close
Choose your channels

கேமராமேன் செம்ம டேலண்ட்.. மாயா சொன்னதை எப்படி காண்பித்துள்ளார் பாருங்கள்..!

Friday, January 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும் என்று மாயா கூறிய போது கேமராமேன் மிகவும் புத்திசாலித்தனமாக அர்ச்சனா பெயர் உள்ள இடத்தை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் பூர்ணிமா வந்த பிறகு மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று தான் பேசிய பிரச்சாரத்தில் ஒரு புத்திசாலித்தனமான கருத்தை தெரிவித்ததாக பூர்ணிமாவிடம் மாயா தெரிவித்துள்ளார்.

அதில் ’ஒரு திரைப்படம் என்றால் கண்டிப்பாக ஒரு ஹீரோ இருப்பார், அந்த ஹீரோ யாராக இருக்க வேண்டும் என்றால், ஒரு இன்பாக்ட் கிரியேட் பண்றவராக இருக்க வேண்டும், ஹீரோவுக்கு பாலினம் கிடையாது’ என்று கூற உடனே பூர்ணிமா, ‘அப்படியே சொல்லிட்டிங்களா’ என்று ஆச்சரியமாக கேட்க மீண்டும் மாயா, ‘எனக்கு ஓட்டு போட வேண்டும் நான் சொல்லவில்லை, ஒரு ஹீரோவுக்கு ஓட்டு போடுங்கள்’ என்று சொன்னேன். இதில் இருந்தே நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி முடித்து விட்டேன் என்று மாயா கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதில் ஹைலைட் என்னவெனில், ‘நீங்கள் ஹீரோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மாயா சொல்லிக் கொண்டிருக்கும் போது கேமரா அர்ச்சனாவின் பெயரை காண்பிக்கிறது. அதில் இருந்து ஹீரோ அர்ச்சனா தான் என மக்களுக்கு உறுதி செய்யும் வகையில் கேமிராமேன் காண்பித்துள்ளதாக பார்வையாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.