close
Choose your channels

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. 'துணிவு' நடிகரும் இணைந்தார்..!

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் யோகி பாபு நாயகனாக நடித்த ’பொம்மை நாயகி’ என்ற படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளதை அடுத்து அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

யோகி பாபுவின் அடுத்த படத்திற்கு ’லக்கி மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கார்த்திக் நடித்த படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் சீன் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, ஹலோ எப்.எம் பாலாஜி, ‘துணிவு’ வீரா, அப்துல் லீ, ராய்ச்சல் ரெபாகா உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

இந்த படத்தை திங்க் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.