close
Choose your channels

'2.0' படத்தில் எத்தனை ரஜினி? எத்தனை அக்சய்குமார்? ஊகிக்க முடியாத கணக்கு

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தின் 3D டீசர் இன்று காலை வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை ஹாலிவுட் படங்களுக்கு இணையான தமிழ்ப்படம் என்றுதான் கூறிக்கொண்டிருந்தோம். ஆனால் இந்த படம் ஹாலிவுட் படத்தைவிட ஒருபடி மேலே இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த இரண்டு கேரக்டர் போக இன்னும் மூன்று கேரக்டர்களில் ரஜினி நடித்திருப்பதாகவும், ஆகமொத்தம் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஐந்து கெட்டப்புகளில் நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அக்சயகுமார் 12 கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளாராம்.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், நேரடியாக 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய படம், ஒரே நேரத்தில் 3000 தொழில்நுட்ப கலைஞர்கள் பணி செய்த முதல் ஆசிய படம் என்பது உள்பட பல சிறப்புகளை பெற்றுள்ள இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.