close
Choose your channels

சமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்!

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம் பெற்ற ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்களையும் படம் பார்த்தவர்கள் நீண்ட நாட்களுக்கு மறக்க மாட்டார்கள் என்பதே இந்த படத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தோன்றும் ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே இதனை அடுத்து இந்தப் படம் தமிழிலும் ரீமேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்வது போல் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இன்று தமிழில் ரிலீசாகிறது. ‘தீரா’ என்று தொடங்கும் இந்த பாடல் தமிழ் ரசிகர்களுக்காக ரிலீஸாக உள்ள நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தமிழ் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மீண்டும் அந்த திரைப்படம் தமிழில் டப் செய்வது என்பது புதுமையான விஷயம் என்பது மட்டுமன்றி விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பை சர்வானந்த், சமந்தா நடிப்பில் ஒப்பிடவும் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சர்வானந்த், சமந்தா நடிப்பில் தமிழில் ரிலீஸ் ஆனாலும் அந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.