close
Choose your channels

'இந்தியன் 2' படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள்: செய்தியாளர்களிடம் காஜல் அகர்வால்..!

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ’இந்தியன் 2’ படம் குறித்த தகவல்களை தெரிவித்தால் என்னை படக்குழுவினர் கொன்று விடுவார்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழில் ’இந்தியன் 2’ படம் உள்பட ஒரு சில படங்களிலும் தெலுங்கில் ’பகவத் கேசரி’ ’சத்தியபாமா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

மேலும் அவர் நடித்து வரும் தெலுங்கு திரைப்படமான ’சத்தியபாமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அவரது பிறந்த நாளை ஒட்டி வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ’இந்தியன் 2’ படத்தில் தனக்கு முக்கியமான கேரக்டர் என்றும் இது போன்ற கேரக்டரில் நான் இதற்கு முன்பு நடித்ததில்லை என்று தெரிவித்தார். மேலும் இந்தியன் 2’ படம் குறித்து இதற்கு மேல் நான் ஏதாவது கூறினால் படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள் என்றும் காமெடியாக தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.