close
Choose your channels

விஐபி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: பிரபல நடிகை கணிப்பு

Monday, May 20, 2019 • தமிழ் Comments

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் தேசிய, மாநில ஊடகங்கள் நேற்று மாலை முதல் தங்களது எக்சிட்போல் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான எக்சிட்போல் கணிப்புகள் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றே கூறுகின்றது. தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி சுமார் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் முக்கிய பிரமுகர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து கணித்துள்ளார்.. அவை பின்வருமாறு:


ராகுல்காந்தி: வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி

பிரதமர் மோடி: வாரணாசியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

கவுதம் காம்பிர்: டெல்லி கிழக்கு தொகுதியில் தோல்வி

ஜெயவர்தன்: தென்சென்னையில் வெற்றி

தயாநிதி மாறன்: மத்திய சென்னையில் வெற்றி: 

கலாநிதி வீராசாமி: வடசென்னையில் வெற்றி 

சிபி ராதாகிருஷ்ணன்: கோவையில் வெற்றி

வெங்கடேசன்: மதுரையில் வெற்றி

கனிமொழி: தூத்துகுடியில் வெற்றி

நயினார் நாகேந்திரன்: ராமநாதபுரத்தில் வெற்றி

கார்த்திக் சிதம்பரம்: சிவகங்கையில் வெற்றி

கன்னியாகுமரியில் பொன்ராதாகிருஷ்ணனும் வசந்தகுமாரும் இழுபறி

மொத்தத்தில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி 10 முதல் 15 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 25 முதல் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதேபோல் தேசிய அளவில் பாஜக கூட்டணி 230 முதல் 260 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 முதல் 110 தொகுதிகளிலும், மற்றவை 130 முதல் 180 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

இவ்வாறு நடிகை கஸ்தூரி கணித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz