close
Choose your channels

வயிற்றில் இருப்பது லட்சுமியா? கணேஷாவா? நடிகையின் கர்ப்பத்தை அறிவித்த கணவர்..!

Thursday, February 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளர்வது லட்சுமியா? கணேஷாவா? என்று அவரது கணவர் தனது மனைவியின் கர்ப்பத்தை உறுதி செய்துள்ளார்

தமிழில் ’கௌரவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாமி கெளதம். ’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்

இந்த நிலையில் ’தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆதித்யா தார் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு யாமி கெளதம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஆதித்யா தார் தனது மனைவியின் கர்ப்பத்தை அறிவித்துள்ளார். தனது மனைவியின் வயிற்றில் இருப்பது கணேஷா? அல்லது லட்சுமியா? என்பது தெரியவில்லை, யார் என்று அறிய ஆவலோடு இருக்கிறோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளதை அடுத்து ஆதித்யா தார் - யாமி கெளதம் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

யாமி கெளதம், பிரியாமணி உள்பட பலர் நடித்த ’ஆர்ட்டிக்கிள் 370’ என்ற திரைப்படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.