close
Choose your channels

சிரஞ்சீவியை அடுத்து இன்னொரு தெலுங்கு பிரபலம் படத்தில் த்ரிஷா .. செகண்ட் ரவுண்ட் அமோகமா இருக்கே..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

18 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உடன் ஒரு படத்தில் நடிக்க சமீபத்தில் த்ரிஷா ஒப்பந்தமான நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் ஒரு தெலுங்கு நடிகருடன் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்த பிறகு அவருக்கு தமிழ், தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்தோம். ஏற்கனவே விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடித்த த்ரிஷா, அஜித்துடன் ’விடாமுயற்சி’ படத்திலும் கமல்ஹாசனுடன் ’தக்லைஃப்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி மலையாளத்தில் மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ என்ற படத்தில் நடித்து வரும் த்ரிஷா, நிவின்பாலுடன் ‘ஐடெண்டிட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உடன் ஒரு படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவருடன் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெங்கடேஷ் உடன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ’பாடிகாட்’ என்ற படத்தில் த்ரிஷா நடித்த நிலையில் மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தை பிரபல தெலுங்கு திரையுலக இயக்குனர் அணில் ரவிப்புடி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.