close
Choose your channels

'கில்லி' போல் ரீரிலீஸ் ஆகும் 'மெட்டி ஒலி' சீரியல்.. சூப்பர் அறிவிப்பு..!

Tuesday, April 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2024 ஆம் ஆண்டை ரீரிலீஸ் ஆண்டு என்று சொல்லலாம் என்பதும் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து பல திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் விஜய், த்ரிஷா நடித்த ’கில்லி’ திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பதும், இந்த படம் புதிய படங்களுக்கு இணையாக வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரும் மே 1ஆம் தேதி அஜித் நடித்த சூப்பர் ஹிட் 2 படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் திரைப்படங்கள் போலவே சூப்பர் ஹிட் ஆன சீரியல்களையும் ரீரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 90 ஆம் ஆண்டுகளில் ஏராளமனோர் ரசித்து பார்த்த சீரியல்களை ஒன்று ’மெட்டிஒலி’ என்பதும் இந்த சீரியலின் டைட்டில் பாட்டையே இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

5 பெண் குழந்தைகளை பெற்ற தந்தை , மகள்களின் திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் அடுத்தடுத்த திருப்பங்களை விறுவிறுப்பாக சொன்ன தொடர் தான் 'மெட்டி ஒலி' என்பதும் இந்த தொடர் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் விரைவில் இந்த தொடரில் இரண்டாம் பாகம் வரும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த தொடர் தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு மே 1ஆம் தேதி முதல் யூடியூப் சேனலில் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கில்லி’ போலவே இந்த சீரியல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.