close
Choose your channels

யுவன், பிரேம்ஜியை அடுத்து 'கோட்' படத்தில் இணைந்த வெங்கட்பிரபுவின் குடும்ப உறுப்பினர்..!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் இன்னொரு சகோதரர் பிரேம்ஜி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது வெங்கட் பிரபுவின் இன்னொரு குடும்ப உறுப்பினர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

’கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற இருக்கும் நிலையில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல ஆயத்தம் ஆகி வருகின்றனர் என்பதும் விரைவில் ரஷ்யாவில் படப்பிடிப்பை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ’

மேலும் இந்த படத்தின் அடுத்த அப்டேட் மாஸாக வெளியாகும் என்றும் இன்னொரு போஸ்டர் வெளியிட தான் விரும்பவில்லை என்றும் வெங்கட் பிரபு தெரிவித்து இருந்தார். மேலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த பணிகள் மும்முரமாக இருக்கும் நிலையில் இப்போதைக்கு அப்டேட் எதுவும் கிடையாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் குடும்ப உறுப்பினர்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி பணிபுரியும் நிலையில் தற்போது வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரனும் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் கங்கை அமரன் ஒரு பாடல் எழுதி உள்ளதாகவும் மொத்தம் இந்த படத்தில் ஐந்து பாடல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, கனிகா என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.