close
Choose your channels

எச்.வினோத் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த அஜித்: என்ன கிஃப்ட் கொடுத்தார்?

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வலிமை’ திரைப்படத்தின் இயக்குனர் வினோத் வீட்டிற்கு நடிகர் அஜித் சர்ப்ரைஸ் விசிட் அடுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில், போனிகபூர் தயாரிப்பில் உருவான ’வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ’வலிமை’ படத்தை தனது குடும்பத்துடன் பார்த்த அஜித் படம் பார்த்து முடித்த உடன் நேராக எச் வினோத்தின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு எச் வினோத் மகனுக்கு காஸ்ட்லியான கிப்ட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் எச் வினோத் இயக்கத்தின் தொடர்ச்சியாக நடித்து முடித்துள்ள அஜித், மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos