close
Choose your channels

'யானை' வெற்றியை அடுத்து அஜித், விஜய் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்!

Monday, July 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அருண் விஜய் மார்க்கெட் கோலிவுட்டில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அஜித், விஜய் படங்களை இயக்கிய இயக்குநரின் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த ’கிரீடம்’ விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய்.

இவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அருண்விஜய் இணைவது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்றும், முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.