நான் எவ்வளவு ஓட்டு முன்னிலையில் உள்ளேன்? சன்னிலியோன் கேள்வி


Send us your feedback to audioarticles@vaarta.com


மக்களவை தேர்தலில் போட்டியிடாத நடிகை சன்னிலியோன் தான் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளேன் என்று கேள்வி கேட்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சன்னிலியோன் காரணம் இல்லாமல் இந்த கேள்வி கேட்கவில்லை. மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவித்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி தொகுப்பாலர் ஒருவர், 'குருதாஸ்பூர் மக்களவை தொகுதி நிலவரம் குறித்த செய்தியை கூறும்போது அந்த தொகுதியில் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் என்று கூறுவதற்கு பதிலாக சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார் என்று தவறாக கூறிவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் இதுகுறித்து சன்னிலியோன் கிண்டலாக மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் ஆர்வக்கோளாறில் இதுமாதிரி தவறாக அறிவிப்பது புதியது அல்ல என்று கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.