close
Choose your channels

அனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Saturday, January 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அனுஷ்கா நடித்த ’பாகமதி’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இதனை அடுத்து இரண்டு வருடங்களாக அனுஷ்கா நடித்த படம் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ’நிசப்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

’நிசப்தம்’ படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்த படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவ்னம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இந்த படத்தில் அனுஷ்கா காது கேளாத வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமந்த் மதுக்கூர் இயக்கிய இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.