close
Choose your channels

லேட்டானாலும் ஃபயரான டைட்டிலை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி.. மாஸ் வீடியோ..!

Sunday, May 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட தலைமையில் சில மணி நேரங்கள் தாமதமானதால் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு சில மணி நேரங்கள் தாமதம் ஆனாலும் ஃபயரான டைட்டிலை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்திற்கு ’டிராகன்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில் இந்த டைட்டிலை தனது சமூக வலைத்தளத்தில் அர்ச்சனா கல்பாத்தி பதிவு செய்துள்ளார். மேலும் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘டிராகன்’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஓ மை கடவுளே’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவும், லவ் டுடே என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதனும் ஒரே படத்தில் இணைவதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’எல்ஐசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.