close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவரா?

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சின்னப்பொண்ணு, அக்சரா, பாவனி, ஸ்ருதி, இசைவாணி, அபினய், இமான், வருண், பிரியங்கா ஆகிய ஒன்பது பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி இன்றைய நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டார்கள் என்றும் மீதி ஏழு பேர்களில் ஒருவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களின் சமூக வலைதளத்தின் தகவலின்படி இந்த வாரம் குறைந்து வாக்குகளின் அடிப்படையில் சின்னப்பொண்ணு வெளியேறி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கடந்த வாரமே சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் யாராவது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிஷேக் திடீரென வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் சின்னப் பொண்ணு வெளியேற்ற விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.