close
Choose your channels

10 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் கிறிஸ்டோபர் நோலன் திரைப்படம்.. மீண்டும் வசூலை குவிக்குமா?

Thursday, April 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சில ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் ரீரிலீஸ் வசூலில் சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தமிழ் படங்களைப் போலவே ஹாலிவுட்டிலும் சில படங்கள் ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இன்டர்ஸ்டெல்லர் என்ற திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு பின் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடக்க 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 165 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவான நிலையில் அப்போதே 733 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலைக்கு பூமி ஆளாகும் நிலையில் புதிய கிரகத்தை தேடி செல்லும் சாகச விண்வெளி பயணம் தான் இந்த படத்தின் கதை. நம்பும்படியான திரைக்கதை, இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் நேர்த்தியான இயக்கம் தான் இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி இந்த படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.