close
Choose your channels

செக்க சிவந்த வானம்: சிம்பு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்?

Tuesday, August 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கி வரும் மல்டி ஸ்டார் திரைப்படமான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் நடித்துள்ள அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களின் கேரக்டர்கள் குறித்த போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து பெரும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன

இந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு முன்னணி நாயகிகள் நடித்திருக்கும் நிலையில் சிம்பு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல மாடல் அழகியான டயானா எரப்பா என்பவர் தான் சிம்பு ஜோடியாக 'சாயா' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் சிம்பு-டயானா இணைந்து இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.