close
Choose your channels

ஹன்சிகாவுக்காக தனுஷ் செய்யும் உதவி

Friday, August 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகை 50 படங்களில் நடிப்பது என்ற மைல்கல்லை தொடுவது மிக அரிது. அந்த வகையில் நடிகை ஹன்சிகா தற்போது 50வது படத்தில் நடிக்கவுள்ளார்.

ஹன்சிகாவின் 50வது படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்படவிருந்தது ஆனால் கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து, இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்றுமுன்னர் ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் தனது 50வது படத்தின் டைட்டில் வரும் சனிக்கிழமை அதாவது நாளை இரவு 8.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும், இந்த அறிவிப்பை தனுஷ் வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹன்சிகாவின் 50வது படத்தை ஜமீல் என்பவர் இயக்கவுள்ளதாகவும், ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.