close
Choose your channels

'2.0' ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

Tuesday, July 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '2.0'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே உள்ளது.

கடந்த வருடம் தீபாவளி, பொங்கல், ஜனவரி 26, ஏப்ரல் 14 என பல்வேறு தேதிகளில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதுகுறித்து ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில், 'கிராபிக்ஸ் பணி செய்து வரும் நிறுவனம் தங்கள் பணியை முடிக்கும் தேதியை உறுதிபட தெரிவித்துள்ளனர். இதனால் இந்த '2.0' திரைப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினி படமும் இவ்வருட இறுதியிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு மட்டும் 'காலா'வை சேர்த்து மூன்று ரஜினி படம் ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.