close
Choose your channels
Kaatrin Mozhi

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் எத்தனை பாடல்கள்?

Wednesday, September 12, 2018 • தமிழ் Comments

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இம்மாதத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு வித்தியாசமான லுக்குடன் கூடிய இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் அஜித் படத்திற்கு முதல்முதலாக இசையமைக்கும் டி.இமான், இந்த படத்திற்காக நான்கு பாடல்களையும் ஒரு தீம் மியூசிக்கையும் கம்போஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் டி.இமானின் வழக்கமான மெலடி பாடலுடன் அட்டகாசமான அஜித் அறிமுக பாடலும் இந்த ஆல்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் வெற்றி ஒளிப்பதிவாளராகவும்,ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.