close
Choose your channels

இதை விட சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்.. வைரலாகும் கெளதமியின் வீடியோ..!

Sunday, June 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மழையில் நனைந்தவாறு நடிகை கௌதமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 1990 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கௌதமி. கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் களமிறங்கி உள்ளார் என்பதும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கௌதமி, தனது மகள் சுப்புலட்சுமி உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னையில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் இன்று காலை சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது. அந்த வகையில் நடிகை கௌதமி மழையில் நனைந்தவாறு எடுத்த வீடியோவை பதிவு செய்து ’இதை விட சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்’ என்று கூறியுள்ளார். கௌதமியின் இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.