close
Choose your channels

யூடியூபர் வேடத்தில் ஜிவி பிரகாஷ்.. டிடெக்ட்டிவ் வேடத்தில் கெளதம் மேனன்.. தொடங்கியது டப்பிங் பணிகள்..!

Monday, May 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூபர் வேடத்தில் ஜிவி பிரகாஷ், டிடெக்டிவ் வேடத்தில் கௌதம் மேனன் நடித்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ் பல படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அனைத்தும் முடிவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் யூடியூபர் கேரக்டரில் ஜிவி பிரகாஷ், டிடெக்டிவ் கேரக்டரில் கௌதம் மேனன் நடித்த ’13’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் முதல் கட்டமாக ஜிவி பிரகாஷ் தனது கேரக்டர் குறித்த டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக டிரைலர், பாடல்கள் ஆகியவற்றை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஜி வி பிரகாஷ் , கௌதம் மேனன், ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை விவேக் என்பவர் இயக்கி வருகிறார். சித்து குமார் இசையில், மூவேந்தர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.